QR (Quick Response) குறியீடு செயல்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதிகொண்ட காந்தங்கள் - டெல்லி
November 7 , 2018 2381 days 739 0
புதுதில்லி மாநகராட்சி கழகம் நுகர்வோர்கள் தங்கள் பயன்பாட்டு கட்டண ரசீதுகளின் எண்ணியல் செலுத்து வசதியை எளிதாக்கிட உடனடி பதில் குறியீடு பொருத்தப்பட்ட ஸ்மைலி குளிர்சாதன வசதி கொண்ட காந்தங்களை விநியோகம் செய்ய இருக்கின்றது.
பொலிவுறுத் திட்டத்தின் கீழ், இந்த காந்தங்கள் தனிப் பயனாக்கப்படும். மேலும் ஒவ்வொரு நுகர்வோரும் தங்கள் நுகர்வோர் கணக்கு எண்ணுடன் வரைபடமாக்கப்பட்ட வில்லையைக் கொண்ட ஒரு தனித்த உடனடி பதில் குறியீட்டைக் கொண்டிருப்பர்.
மின்சார மற்றும் குடிநீர் கட்டணங்களுக்காக தனிப்பட்ட காந்தங்கள் புது தில்லி மாநகராட்சிக் கழகத்தால் வழங்கப்படும்.
நுகர்வோர்களால் இந்த காந்தங்களை தங்கள் குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டிக் கொள்ள இயலும். மேலும் நுகர்வோர்கள் தங்கள் கட்டணங்களை உடனடியாக செலுத்திட, காந்தங்கள் மீதுள்ள உடனடி பதில் குறியீட்டை தங்கள் ஸ்மார்ட் போன் அல்லது கைபேசி மூலம் ஸ்கேன் செய்ய அல்லது அளவிட முடியும்.