QS அமைப்பின் மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் 2024
July 22 , 2023 660 days 368 0
இலண்டன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாக தனது முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதில் டோக்கியோ இரண்டாவது இடத்தையும், சியோல் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ள நிலையில், மெல்போர்ன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது மற்றும் முனிச் ஐந்தாவது இடத்திற்குப் பின் தள்ளப் பட்டது.
குவாகுவேரெல்லி சைமண்ட்ஸ் அமைப்பின் (QS) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் நகரங்களுக்கான சமீபத்தியத் தரவரிசையில் இந்திய நகரங்களில் மும்பை 118வது இடத்தைப் பிடித்துள்ளது.
132வது இடத்தினைப் பெற்று டெல்லி நகரம் மாணவர்கள் வாழ்வதற்கு மிகவும் செலவு குறைந்த ஒரு நகரமாகத் திகழ்கிற நிலையில், அதைத் தொடர்ந்து பெங்களூரு 147வது இடத்திலும், சென்னை 154வது இடத்திலும் உள்ளன.