QS அமைப்பின் மாணவர்களுக்கான மிகவும் செலவு குறைந்த நகரம் 2026
July 21 , 2025 6 days 34 0
இது குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் என்ற நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப் படுகிறது.
இந்தக் குறியீட்டைத் தயாரிக்கும் போது பாதுகாப்பு, மாசுபாடு, வாழ்வதற்குத் தேவையான செலவினம், விரும்பத்தக்க தன்மை மற்றும் முதலாளித்துவச் செயல்பாடு போன்ற பல்வேறு காரணிகளை QS கருத்தில் கொண்டது.
இந்தத் தரவரிசையில் சியோல், டோக்கியோ மற்றும் இலண்டன் ஆகியவை முதல் மூன்று இடத்தில் உள்ள நகரங்களாகும்.
சியோல் மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாகும் என்ற நிலையில் மேலும் இலண்டன் தொடர்ந்து ஆறு ஆண்டு காலமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நான்கு முக்கிய இந்திய நகரங்கள் இந்தக் குறியீட்டில் வலுவான முன்னேற்றத்தைக் கண்டன.
டெல்லி நகரமானது இந்தக் குறிகாட்டியில் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து மாணவர்களுக்கான உலகின் மிகவும் செலவு குறைந்த நகரமாக உருவெடுத்துள்ளது.
சென்னை கடந்த ஆண்டு இருந்த 140வது இடத்திலிருந்து 128வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு அல்லது ஆஸ்திரேலியா போன்ற பிரபலமான இடங்களுடன் ஒப்பிடச் செய்யும் போது, இந்தியாவின் மிக மேம்பட்ட தரவரிசைக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கியக் காரணி அதன் நகரங்களில் கல்வி மற்றும் வாழ்வதற்கு தேவையான செலவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
மலிவு விலையைத் தாண்டி, இந்திய நகரங்களும் மிகவும் வலுவான முதலாளித்துவச் செயல்பாட்டை கொண்டுள்ளன.