QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையின் 11வது பதிப்பானது சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையானது 80 வெவ்வேறு இடங்களை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள முதல் 1,000 பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சிறந்த பல்கலைக் கழகமாக தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை முறையே உலகளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த பல்கலைக்கழகமாகும்.
இந்தியா குறித்து:
மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனமானது அதில் சிறந்த இந்தியக் கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது 172வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனமும் முதல் 100 இடங்களில் தரவரிசைப் படுத்தப் படவில்லை.
இந்திய அறிவியல் நிறுவனம் (185), தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (193) ஆகியவை இந்தியாவைச் சேர்ந்த முதல் 200 இடங்களில் இடம் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களாகும்.
பாடப்பிரிவைப் பொறுத்தவரை, பன்னிரண்டு இந்திய பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. அதில் மூன்று இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்தந்த பாடப்பிரிவில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
மும்பை இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (IIT), தில்லி IIT, மதராஸ் IIT, கரக்பூர் IIT, இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூர், குவஹாத்தி IIT, பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM), அகமதாபாத் IIM, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகியவை இந்த 12 பல்கலைக் கழகங்களாகும்.
இதில் பெட்ரோலிய பொறியியலுக்காக மதராஸ் IIT 30வது இடத்தையும் பம்பாய் IIT 41வது இடத்தையும் தாதுக்கள் மற்றும் சுரங்கப் பொறியியலுக்காக கரக்பூர் IIT 44வது இடத்தையும் மேம்பாட்டு ஆய்வுகளுக்காக தில்லி பல்கலைக்கழகம் 50வது இடத்தையும் பிடித்துள்ளன.