2027 ஆம் ஆண்டிற்கான QS (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைகள் வெளியிடப்பட்டது, இதில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் டெல்லி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உலகளவில் IIT டெல்லி 5 இடங்கள் முன்னேறி 118வது இடத்தைப் பிடித்துள்ளதுடன் இது 2027 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் ஓர் இந்திய நிறுவனம் பெற்ற மிக உயர்ந்த இடமாகும்.
உலகளவில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பாம்பே 134வது இடத்தையும், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் 170வது இடத்தையும் பிடித்துள்ளன என்ற நிலையில் உலகளாவிய முதல் 200 இடங்களில் உள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் இவை மட்டுமேயாகும்.
QS தரவரிசையில் இந்தியா 52 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது; இதன்மூலம் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக உலகளவில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) தொடர்ந்து 15-வது ஆண்டாக உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்து ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.