QS அமைப்பானது (Quacquarelli Symonds) 2022 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக் கழகத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சீனாவின் பீக்கிங் பல்கலைக் கழகம் 2வது இடத்திலும், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் மற்றும் ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பல்கலைக் கழகம் ஆகியவை 3வது இடத்திலும் உள்ளன.
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (பிராந்திய ரீதியாக 42வது இடத்தில்) மற்றும் டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (பிராந்திய ரீதியாக 45வது இடத்தில்) ஆகியவை முதல் 50 இடங்களில் உள்ள இரண்டு இந்தியக் கல்வி நிறுவனங்களாகும்.
கடந்த ஆண்டு 50வது இடத்தில் இருந்த சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது 4 இடங்கள் பின் தள்ளி தற்போது 54வது இடத்தில் உள்ளது.
126 பல்கலைக் கழகங்களுடன் இந்தத் தரவரிசையில் இடம் பெற்ற சீனாவைத் தொடர்ந்து 118 இந்தியப் பல்கலைக்கழகங்களுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது.