'QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2026' பாட வாரியான பட்டியலில், கோழிக்கோடு இந்திய மேலாண்மை நிறுவனம் உலகளாவிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகள் பிரிவில் இந்த நிறுவனம் உலகளவில் 78-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் 141-வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இந்த QS தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 6,277 கல்வி நிறுவனங்கள் பல்வேறு பாடங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன.
கோழிக்கோடு இந்திய மேலாண்மை நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் 401-450 என்ற தர வரிசைப் பிரிவில் இருந்து முன்னேறி, 2026 ஆம் ஆண்டில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.