TNPSC Thervupettagam

QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைகள்

March 5 , 2019 2314 days 683 0
  • குவாக்கரேலி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds - QS) நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு வருடாந்திர பல்கலைக்கழகத் தரவரிசைப்பட்டியல் QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையாகும்.
  • முன்னதாக இது டைம்ஸ் உயர்கல்வி – QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைகள் என்று அறியப்பட்டது.
  • இந்தியப் பல்கலைக்கழகங்கள் சமீபத்திய QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் தங்களது செயல்திறனை கடந்த வருடத்தைவிட முதல் 200 இடங்களில் 22க்கும் மேற்பட்ட துறைகள் 2019 ஆம் ஆண்டு பொருளில் பட்டியலிட்ட வகையில் உயர்த்தியிருக்கின்றன.
  • உலகளாவிய முதல் 200 இடங்களில் IISc, IIM, IITs, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்து 89 துறைகள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • 20க்கும் மேற்பட்ட இதர தேசிய அமைப்புகளுடன் முதல் 200 பட்டியலில் துறைகளைக் கொண்டுள்ள வகையில் உலகளவில் இந்தியா தற்போது 21-வது இடத்தில் இருக்கின்றது.
  • முன்னணி 50 பிரிவுகளில் மூன்று இடங்கள் டெல்லிப் பல்கலைக்கழகத்தால் மேம்பாட்டு கல்விக்கான நிலையில் 37-வது இடத்தில் என்றவாறு தரவரிசைப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்