QS (Quacquarelli Symonds) சர்வதேசப் பல்கலைக்கழக தரவரிசையின் 19வதுப் பதிப்பை வெளியிட்டுள்ளது.
QS என்பது லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய உயர்கல்வி தரவரிசை ஆகும்.
சர்வதேச தரவரிசை நிபுணர் குழுவின் (IREG) அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே சர்வதேச தரவரிசை இதுவாகும்.
சமீபத்தியப் பதிப்பில் 41 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி இந்தியாவின் முன்னணி தரவரிசையில் உள்ள ஒரு தனியார் நிறுவனமாகும்.
தரவரிசையில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) முதலிடத்தையும், அதனைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (யுகே) மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ஆகியவையும் உள்ளன.