QS மாணவர்களுக்கு உகந்த நகரங்கள் 2026 தரவரிசையில், டெல்லி சர்வதேச மாணவர்களுக்கான உலகின் மிகவும் மலிவான நகரமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
"India’s 155 million Student Mandate" என்ற அறிக்கை நைட் ஃபிராங்க், டெலாய்ட் இந்தியா மற்றும் QS ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
மிகவும் உகந்தப் பட்டியலில் மும்பை 11வது இடத்திலும், பெங்களூரு 15வது இடத்திலும் உள்ளன.
இந்தத் தரவரிசையானது, மலிவுத்தன்மை, வேலைவாய்ப்புச் செயல்பாடு, பல்கலைக் கழகத் தரவரிசைகள் மற்றும் நகரத்தின் விரும்பத்தக்க தன்மை உள்ளிட்ட ஆறு குறிகாட்டிகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள 150 நகரங்களை மதிப்பிட்டது.
18-23 வயதுக்குட்பட்ட சுமார் 155 மில்லியன் மக்கள் உள்ள இந்தியா உலகிலேயே மிகப்பெரிய உயர்கல்விச் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.