உலகளவில், அமெரிக்காவின் மாசாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (MIT) ஆனது இந்த ஆண்டும் 14வது முறையாக 'உலகின் சிறந்த ஒரு கல்வி நிறுவனம்' என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
இந்த ஆண்டு தர வரிசையில், 12 இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக நிறுவனங்கள் (IIT) உட்பட மொத்தம் 54 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
எட்டு பல்கலைக்கழகங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன.
இந்தியா தற்போது இந்தத் தரவரிசையில் அதிகப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்ற நான்காவது நாடாக உள்ளது.
அமெரிக்கா (192), ஐக்கியப் பேரரசு (90), மற்றும் சீனா (72) ஆகியவை மட்டுமே இந்தத் தர வரிசையில் இந்தியாவை விடவும் மிகவும் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளன.
டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (123) மற்றும் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (129) ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (180) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.