QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழக நிலைத்தன்மை தரவரிசை 2024
December 12 , 2023 746 days 574 0
பட்டியலிடப்பட்ட 56 இந்தியப் பல்கலைக்கழகங்களில், டெல்லி பல்கலைக்கழகம் (DU) உலகளவில் 220வது இடத்தைப் பிடித்தது.
இப்பல்கலைக்கழகம் ஆனது, ஆசியாவில் 30வது இடத்தையும் பெற்றுள்ளது.
சென்னை, காரக்பூர், ரூர்க்கி மற்றும் டெல்லி ஆகிய இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவை முறையே 344வது, 349வது, 387வது மற்றும் 426வது இடங்களைப் பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறிகாட்டியில், நான்கு இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகின் முன்னணி 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ளன. வேலூர் தொழில் நுட்பக் கழகம் தேசிய அளவில் (உலகளவில் 49) முதலிடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு தரவரிசையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா தனித்து நிற்கிற நிலையில், அதன் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் மூன்று பல்கலைக்கழகங்கள் இடம் பெற்ற கொண்ட கனடா நாட்டினைத் தொடர்ந்து, இரண்டு பல்கலைக்கழகங்களைக் கொண்டு ஐக்கியப் பேரரசு மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.