சுவீடனில் உள்ள லுண்ட் பல்கலைக் கழகம் ஆனது உலகளவில் முதல் இடத்தைப் பிடித்தது என்ற நிலையில்அதைத் தொடர்ந்து கனடாவின் டொராண்டோ பல்கலைக் கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
QS அமைப்பின் 2026 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக நிலைத்தன்மை தர வரிசையில் முதல் 200 இடங்களில் எந்த இந்திய நிறுவனமும் இடம் பெற வில்லை.
டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT டெல்லி) உலகளவில் 205வது இடத்தில் மிக உயரிய இடத்தைப் பெற்ற இந்திய நிறுவனமாகும் என்பதோடுஇது கடந்த ஆண்டு 171வது இடத்தைப் பிடித்தது.
IIT பாம்பே 236வது இடத்தைப் பிடித்துள்ளது என்பதோடுமேலும் IIT கரக்பூர் 236வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற நிலையில்இந்த இரண்டும் கடந்த ஆண்டு இருந்த இடத்தை விடத் தாழ்வான தர வரிசையைப் பெற்றன.
IIT மதராஸ் (305), IIT கான்பூர் (310), மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் பெங்களூரு (462) ஆகியவை பிற முன்னணி இந்திய நிறுவனங்கள் ஆகும்.