குவாக்கரேலி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds - QS) நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு வருடாந்திர பல்கலைக்கழகத் தரவரிசைப்பட்டியல் QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையாகும்.
முன்னதாக இது டைம்ஸ் உயர்கல்வி – QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைகள் என்று அறியப்பட்டது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் சமீபத்திய QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் தங்களது செயல்திறனை கடந்த வருடத்தைவிட முதல் 200 இடங்களில் 22க்கும் மேற்பட்ட துறைகள் 2019 ஆம் ஆண்டு பொருளில் பட்டியலிட்ட வகையில் உயர்த்தியிருக்கின்றன.
உலகளாவிய முதல் 200 இடங்களில் IISc, IIM, IITs, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இருந்து 89 துறைகள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
20க்கும் மேற்பட்ட இதர தேசிய அமைப்புகளுடன் முதல் 200 பட்டியலில் துறைகளைக் கொண்டுள்ள வகையில் உலகளவில் இந்தியா தற்போது 21-வது இடத்தில் இருக்கின்றது.
முன்னணி 50 பிரிவுகளில் மூன்று இடங்கள் டெல்லிப் பல்கலைக்கழகத்தால் மேம்பாட்டு கல்விக்கான நிலையில் 37-வது இடத்தில் என்றவாறு தரவரிசைப்படுத்தப்பட்டன.