TNPSC Thervupettagam

QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைகள் 2027

June 20 , 2026 2 days 47 0
  • 2027 ஆம் ஆண்டிற்கான QS (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைகள் வெளியிடப்பட்டது, இதில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் டெல்லி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • உலகளவில் IIT டெல்லி 5 இடங்கள் முன்னேறி 118வது இடத்தைப் பிடித்துள்ளதுடன் இது 2027 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் ஓர் இந்திய நிறுவனம் பெற்ற மிக உயர்ந்த இடமாகும்.
  • உலகளவில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பாம்பே 134வது இடத்தையும், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் 170வது இடத்தையும் பிடித்துள்ளன என்ற நிலையில்  உலகளாவிய முதல் 200 இடங்களில் உள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் இவை மட்டுமேயாகும்.
  • QS தரவரிசையில் இந்தியா 52 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது; இதன்மூலம் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக உலகளவில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) தொடர்ந்து 15-வது ஆண்டாக உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்து ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்