TNPSC Thervupettagam
September 19 , 2021 1426 days 660 0
  • அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் QUAD நாடுகளின் முதலாவது தனிப்பட்டச் சந்திப்பினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்த உள்ளார்.
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் யோசிஹைடு சுகா ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
  • நான்கு தரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தையானது ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடையே மேற்கொள்ளப்படும்.
  • இது முதன்முறையாக 2007 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் சந்திப்பின் போது நடைபெற்றது.
  • இந்த நான்கு நாடுகளும் ஜனநாயக நாடுகள், தடையற்ற கடல்சார் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பின் பொது நலன்கள் ஆகியவற்றுக்கான ஒரு பொதுவான தளமாகத் திகழ்கின்றன.
  • சீனா இதனை ஒரு வளர்ந்து வரும்ஆசிய NATO கூட்டமைப்பு” என முத்திரைப் பதித்து உள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்