TNPSC Thervupettagam

QUAD அமைப்பின் 5 முக்கிய இந்தோ-பசிபிக் முன்னெடுப்புகள்

May 30 , 2026 13 hrs 0 min 18 0
  • புதுதில்லியில் நடைபெற்ற குவாட் (QUAD) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டன.
  • குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • கடல்சார் கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வை மேம்படுத்துவதற்காக, 'இந்தோ-பசிபிக் கடல்சார் கண்காணிப்பு ஒத்துழைப்பு முன்னெடுப்பை' குவாட் தொடங்கியது.
  • பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 'இந்தோ-பசிபிக் கடல் சார் விழிப்புணர்வு' (IPMDA) முன்னெடுப்பு விரிவுபடுத்தப்பட்டது.
  • பசிபிக் தீவு நாடுகளில் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக “எதிர்காலத் துறைமுகங்கள்” என்ற முன்னெடுப்பை குவாட் அறிவித்தது.
  • முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களை வெட்டியெடுத்தல், பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் ஒத்துழைக்க இந்தியா மற்றும் அமெரிக்கா 'முக்கிய கனிமங்கள் கட்டமைப்பு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • பிராந்திய அளவிலான ஆற்றல் நிலைத்தன்மை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அவசரகால காலங்களில் பதிலளிக்கும் அமைப்புகளை ஆதரிப்பதற்காக குவாட் ஒரு புதிய 'இந்தோ-பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு முன்னெடுப்பைத்' தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்