இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நாற்கரப் பாதுகாப்புப் பேச்சு வார்த்தைக்கான முதல் தனிநபர் சந்திப்பானது வாசிங்டன்னில் நடத்தப் பட்டது.
இந்தச் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவர்கள் அனைவரையும் வெள்ளை மாளிகையில் வைத்துச் சந்தித்தார்.
‘குவாட் நாடுகளின் தடுப்பு மருந்து முன்னெடுப்பானது’ இந்தோ பசிபிக் நாடுகளுக்கு உதவும் எனவும் பிரதமர் மோடி அவர்கள் கூறினார்.