QUAD முக்கியமான கனிமங்கள் முன்னெடுப்புக் கட்டமைப்பு
May 31 , 2026 10 days 76 0
புது தில்லியில் நடைபெற்ற 11-வது Quad வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், Quad நாடுகள் 'Quad முக்கியமான கனிமங்கள் முன்னெடுப்புக் கட்டமைப்பை' வெளியிட்டன.
இந்தக் கட்டமைப்பு பாதுகாப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியாகும்.
முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களுக்கு சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள விநியோக வழிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது.
இது சுரங்கப் பணி, செயலாக்கம், சுத்திகரிப்பு, உற்பத்தி உள்ளீடுகள் மற்றும் முக்கியமான கனிமங்களை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட முழு விநியோகச் சங்கிலியையும் உள்ளடக்கியது.
மின்சார வாகன (EV) மின்கலங்கள், குறைகடத்திகள், சூரிய மின்கல அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான கனிமங்கள் அத்தியாவசியமானவை.