R. வைஷாலி – தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை
December 4 , 2023 664 days 481 0
இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் (GM) பட்டத்தைப் பெற்ற மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லோபிரேகாட் ஓபன் போட்டியின் போது, 2,500 எலோ புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற இறுதி நிலைத் தகுதி நிபந்தனையினை அவர் நிறைவு செய்தார்.
அவரது இளைய சகோதரர் R. பிரக்ஞானந்தா 2018 ஆம் ஆண்டில், அவரது 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினைப் பெற்ற முதல் சகோதர-சகோதரி ஜோடியாக வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளனர்.
கோனேரு ஹம்பி கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை வென்ற முதல் இளம் நபர் ஆவார்.
2002 ஆம் ஆண்டில் அவரது 15வது வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை வென்று உலகின் மிக இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
மற்றொரு இந்திய பெண் கிராண்ட்மாஸ்டர் துரோணவல்லி ஹரிகா ஆவார்.