அயோவா பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) ஆய்வு ஆனது, RAD52 எனப்படும் DNA பழுதுபார்க்கும் புரதத்தின் எதிர்பாராத அமைப்பை வெளிப்படுத்தியது.
RAD52 பிரிப்புச் செல்களில் நகலெடுக்கும் DNAவினைப் பாதுகாக்கிறது மற்றும் புற்று நோய் செல்கள் DNA சேதத்திலிருந்துத் தப்பிக்க உதவுகிறது.
DNA பழுதுபார்ப்பு குறைபாடுகள் உள்ள புற்றுநோய்கள் DNA பழுதுபார்க்கும் காப்புப் பிரதியாக RAD52 புரதத்தினைச் சார்ந்துள்ளன.
RAD52 புரதம் ஆனது, ஆரோக்கியமான செல்களில் பரவக் கூடியது, ஆனால் BRCA1 மற்றும் BRCA2 குறைபாடுள்ள புற்றுநோய் செல்களின் உயிர் வாழ்விற்கு அவசியம் ஆகும்.
இந்த ஆய்வு ஆனது கிரையோஜெனிக் எலக்ட்ரான் நுண்ணோக்கியை (CryoEM) பயன்படுத்தி, RAD52 ஆனது DNA-வில் இரட்டை வளைய அமைப்பை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது.
தடுப்பான்களைக் கொண்டு RAD52 புரதத்தினை இலக்கு வைப்பது சாதாரண செல்களில் குறைந்தபட்ச விளைவைக் கொண்ட புதிய புற்றுநோய் எதிர்ப்பு மீதான சிகிச்சைகளை வழங்கக் கூடும்.