இந்திய இரயில்வே நிர்வாகமானது பயணிகளுக்கான பல்வேறு புதிய அனைத்து வசதிகள் கொண்ட RailOne செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியானது, இரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் (CRIS) 40வது ஸ்தாபன தினத்தில் வெளியிடப்பட்டது.
RailOne செயலியானது பயணச் சீட்டு முன்பதிவு, உணவு வாங்குவதற்கான பதிவுகளை செய்தல் மற்றும் இரயில் பயணம் சார்ந்த விசாரணைகள் போன்ற சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.
பயனர்கள் RailOne மூலம் முன்பதிவு செய்யப்பட்ட, முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடையை அனுமதிக்க என்று அனுமதிச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
RailOne ஆனது சரக்கு இரயில் சேவை சார்ந்த விசாரணைகளையும் வழங்குவதோடு, இது ஒரு முழுமையான இரயில் சேவை தளமாக அமைகிறது.
இந்த செயலியானது இரயில் கனெக்ட், IRCTC eCatering, இரயில் மதத் மற்றும் UTS போன்ற பல பழைய செயலிகளை ஒன்றாக இணைக்கிறது.