TNPSC Thervupettagam

RBI பரிமாற்ற திட்டம்

August 4 , 2026 2 days 63 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சலுகை அடிப்படையிலான பரிமாற்ற (ஸ்வாப்) வசதி 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதிக்குள் $40.8 பில்லியன் அந்நியச் செலாவணி (forex) வரவுகளை ஈர்த்துள்ளது.
  • வெளிநாட்டு நாணய வரவுகளை ஊக்குவிக்கவும் மற்றும் உள்நாட்டு பணப் புழக்கத்தை ஆதரிக்கவும் இந்த வசதி 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று தொடங்கப் பட்டது.
  • வெளிநாட்டு நாணய வெளிநாடுவாழ் (வங்கி) [FCNR(B)] வைப்புத்தொகைகள் $36.725 பில்லியன் என்ற அளவில் அதிகப் பங்கை அளித்துள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டு நாணயக் கடன்கள் (OFCBs) மற்றும் வெளி வணிகக் கடன்கள் (ECBs) உள்ளன.
  • உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தவும், இந்திய ரூபாயை நிலைப்படுத்தவும் மற்றும் வெளி நாட்டு நாணயப் புழக்கத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • FCNR(B) ஸ்வாப் சாளரம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலும், OFCB மற்றும் ECB வசதிகள் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலும் திறந்திருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்