TNPSC Thervupettagam

RBI ஈவுத்தொகை கட்டமைப்பு 2026

March 31 , 2026 12 hrs 0 min 34 0
  • இந்திய ரிசர்வ் வங்கி தனது வங்கி ஈவுத்தொகை கட்டமைப்பை மாற்றியமைத்து உள்ளதுடன் 2026-27 நிதி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய செயலாக்க விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வலுவான மூலதன இருப்புகளைப் பராமரிப்பதன் மூலமும், நிதி அபாயங்களைத் தடுப்பதன் மூலமும் வங்கி முறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
  • ஈவுத்தொகை வழங்கலை வங்கிகளின் நிதி வலிமை மற்றும் நிலைத்தன்மையுடன் சிறப்பாக இணைக்க, புதிய விதிகள் 2025-ஆம் ஆண்டின் கட்டமைப்பிற்கு மாற்றாக அமைகின்றன.
  • போதுமான மூலதனத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக, வங்கிகள் தங்கள் வரியைத் தள்ளுபடி செய்த பின் கிடைக்கும் லாபத்தில் 75%-க்கு மேல் ஈவுத்தொகையாக வழங்க முடியாது.
  • ஈவுத்தொகை முடிவுகள் ஆனது மூலதனப் போதுமான விகிதம், லாபத்தன்மை மற்றும் சொத்து தரம் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.
  • வெளிநாட்டு வங்கிகள் முன் அனுமதியின்றித் தங்கள் லாபத்தைத் தாய் நிறுவனங்களுக்கு அனுப்பலாம், ஆனால் அவை ஒழுங்குமுறை நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்