ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் முறையை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2021 ஆம் ஆண்டு கட்டமைப்பிற்குப் பதிலாக திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாயத் திட்டத்தை (RB-IOS) 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது வங்கிகள், NBFCகள் (வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்), கட்டண முறைமை இயக்குநர்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதற்கு விரைவான, கட்டணமில்லா மற்றும் விரோதமற்ற பொறி முறையை வழங்குகிறது.
இது "ஒரு நாடு, ஒரு குறைதீர்ப்பாயம்" என்ற அமைப்பைப் பின்பற்றுகிறது, இதனால் குறிப்பிட்ட மண்டல அலுவலகத்தை அடையாளப்படுத்தாமல் புகார்களை அளிக்க முடியும்.
நிதி இழப்புக்கான இழப்பீட்டு வரம்பை ₹30 லட்சமாகவும், அலைக்கழிப்பு, தாமதம் மற்றும் மன உளைச்சலுக்கான இழப்பீட்டை ₹3 லட்சமாகவும் RBI உயர்த்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை அணுக வேண்டும், 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் ரிசர்வ் வங்கியிடம் முறையிடலாம்.