TNPSC Thervupettagam

RBI நிதி உள்ளடக்கக் குறியீடு 2026

July 27 , 2026 15 hrs 0 min 29 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI), நாட்டின் நிதி உள்ளடக்கக் குறியீட்டில் (FI-Index) முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது; இக்குறியீடு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 67.0-ஆக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 70.0-ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தச் சீரான உயர்வு, நாடு முழுவதும் நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவதிலும், நிதிச் செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பை ஆழப்படுத்துவதிலும் இந்தியா அடைந்து வரும் தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
  • அடிப்படை ஆண்டு ஏதுமின்றி 97 குறியீடுகளைக் கண்காணிக்கும் இந்தக் கூட்டு நிதிச் சேர்க்கை குறியீடு (FI-Index), இந்தியாவின் நிதிச் சூழல் அமைப்பை மூன்று முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறது: அணுகல் (35 சதவீத முக்கியத்துவம்), பயன்பாடு (45 சதவீதம்) மற்றும் தரம் (20 சதவீதம்).
  • இக்குறியீடு முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டிற்காக) அறிமுகப்படுத்தப்பட்டது; இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்