RBIயிலிருந்து 1.76 இலட்சம் கோடி நிதி மத்திய அரசிற்கு மாற்றம்
August 27 , 2019 2182 days 772 0
இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India - RBI) ஆளுநரான சக்திகாந்த தாஸ் தலைமையிலான RBI வாரியமானது தன்னிடம் உள்ள ஈவுத் தொகை மற்றும் உபரி நிதியான 1.76 டிரில்லியனை மத்திய அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.
“உபரி நதியை மத்திய அரசிற்கு வழங்கலாம்” என்ற RBIயின் முன்னாள் ஆளுநரான பிமல் ஜலன் தலைமையிலான ஒரு உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை RBI வாரியம் ஏற்றுக் கொண்ட பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இதுவரை வழங்கியுள்ள மிக உயர்ந்த தொகை ரு.65,896 கோடியாகும் (2014-15 ஆம் ஆண்டில்).
இந்த மாற்றமானது
பொருளாதாரத்திற்கு ஒரு நிதி ஊக்கமாகச் செயல்படும்.
நிதிப் பற்றாக்குறை இலக்கை எதிர் கொள்ள அரசிற்கு உதவும்.