RCS UDAN – டெல்லி மற்றும் கஜுராஹோ இடையிலான முதல் விமானப் போக்குவரத்து
February 23 , 2022 1277 days 513 0
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய M. சிந்தியா, டெல்லிக்கும் மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ என்ற ஒரு பாரம்பரிய நகருக்கும் இடையிலான முதலாவது நேரடி விமானத்தினைச் சமீபத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதன் தொடக்கத்துடன், UDAN - RCS திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானப் போக்குவரத்து பாதைகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக மாறியது.
RCS – UDAN 3.0 திட்டத்தின் கீழ், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு டெல்லி-கஜுராஹோ–டெல்லி என்ற பாதைக்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது ஒரு மிகப்பெரிய பிராந்திய விமானப் போக்குவரத்து நிறுவனமும் இத்திட்டத்திற்கு வலுவான ஆதரவை வழங்கி வரும் நிறுவனமும் ஆகும்.