2025 ஆம் ஆண்டு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க (RDI) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 99,771 கோடி ரூபாய் அல்லது 11.65 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது ஆராய்ச்சி மற்றும் உள்ளார்ந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதலீட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.64% மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகிறது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற பிற நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% முதல் 5% வரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக என்று செலவிடுகின்றன.
இந்த நிதியானது 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) இந்த நிதியின் மேலாண்மை நடவடிக்கைகளை நிர்வகிக்கும்.
இந்தத் திட்டத்தில் ஆராய்ச்சியை நன்கு வணிகமயமாக்குதல் மற்றும் ஆய்வக உள் கட்டமைப்பை அமைத்தல் ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டமானது அடிப்படை கருத்தாக்கங்களிலிருந்து (TRL-4) ஆராய்ச்சியை மிக முழுமையாகத் தயாராக உள்ள தொழில்நுட்பங்களாக (TRL-9) மாற்ற உதவும்.
இதில் தொழில்நுட்பத் தயார்நிலை நிலை (TRL) ஆனது ஒரு புதியக் கண்டுபிடிப்பின் மேம்பாட்டுக் கட்டத்தை மதிப்பிடுகிறது.