சுஸ்லான் குழுமம் ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து 15 உற்பத்தி அலகுகளிலும் முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் உற்பத்தி மாற்றத்திற்கான உலகளாவிய RE100 முன்னெடுப்பில் இணைந்த முதல் இந்திய எரிசக்தி நிறுவனமாக இது மாறியது.
சுஸ்லான் நிறுவனம் 2035 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைமையையும் 2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து உமிழ்வு பகுதிகளிலும் நிகரச் சுழிய உமிழ்வு நிலையையும் எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, அதன் துலே ரோட்டார் பிளேடு அலகு ஆனது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்குகிறது என்பதோடு இதன் மூலம் 92 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்பன் நடுநிலைமை எட்டப்படுகிறது.
இந்த நிறுவனமானது உலகளவில் 17 நாடுகளில் சுமார் 21.1 GW அளவிலான காற்றாலை ஆற்றல் திறனை நிறுவியுள்ளது.