ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு ஆதரவளிக்க, ஏற்றுமதி மேம்பாட்டு இயக்கத்தின் (EPM) கீழ் இந்திய அரசு 'RELIEF' (ஏற்றுமதி எளிதாக்கத்திற்கான மீள்திறன் மற்றும் தளவாடச் செயல்பாடு) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் சரக்குக் கட்டண உயர்வு, அதிக காப்பீட்டுப் பிரீமியங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நிச்சயமற்றத் தன்மையால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் ஏற்றுமதி கடன் அபாயக் காப்பீட்டை வழங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தால் (ECGC) செயல்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட ஏற்றுமதிகளுக்கு 100% கூடுதல் அபாயக் காப்பீட்டையும், இடையூறு காலத்தின் புதிய ஏற்றுமதிகளுக்கு 95% வரை காப்பீட்டையும் பெறலாம்.
இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஒரு ஏற்றுமதியாளருக்கு அதிகபட்சம் ₹50 லட்சம் வரை சரக்கு மற்றும் காப்பீட்டு கூடுதல் கட்டணத்தில் 50% வரை திரும்பப் பெறலாம்.