TNPSC Thervupettagam
December 7 , 2025 5 days 66 0
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியாவுடனான பரஸ்பரத் தளவாடப் பரிமாற்ற ஆதரவு (RELOS) ஒப்பந்தத்தை ரஷ்யா அங்கீகரித்தது.
  • எரிபொருள் நிரப்புதல், பழுதுபார்ப்பு, விநியோகம் மற்றும் பராமரிப்புக்காக என இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் ஒன்றுக்கொன்று ராணுவத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை அணுக RELOS அனுமதிக்கிறது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது பாதுகாப்புத் துறை சார் ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) ஆகிய சில நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.
  • ஆர்க்டிக் மற்றும் பசிபிக் தளங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட ரஷ்யக் கடற்படை மற்றும் விமானத் தளங்களை இந்தியா அணுகுகிறது.
  • Su-30MKI விமானங்கள், T-90 பீரங்கிகள், MiG மற்றும் சுகாய் படைகள் மற்றும் S-400 வான் வழிப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற இராணுவ உபகரணங்களைப் பராமரிப்பதை RELOS ஆதரிக்கிறது.
  • இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடனான இந்தியாவின் பிற பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு நிறை நிரப்பாக உள்ளது:
    • LEMOA (தளவாடப் பரிமாற்றத்திற்கான உடன்படிக்கை குறிப்பு),
    • COMCASA (தொலைத் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்), மற்றும்
    • BECA (அடிப்படைப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்).

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்