டிரம்ப் அரசினுடைய “Remain in Mexico” என்ற கொள்கையை தற்போதைய அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
இந்தக் கொள்கை அமெரிக்காவில் புகலிடம் கோரும் ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க நாட்டு அகதிகளை அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக வேண்டி மெக்சிகோவில் காத்திருக்கச் செய்து விட்டது.
இந்தக் கொள்கை ரத்தானதையடுத்து இதில் பதிவு செய்த 11,000 என்ற அளவிலான புலம்பெயர்ந்தோர்கள் புகலிடத்திற்கான கோரிக்கையைத் தொடர்ந்திட வேண்டி அமெரிக்காவினுள் நுழைவதற்கு அனுமதிக்கப் படுவர்.