TNPSC Thervupettagam
December 31 , 2025 9 days 44 0
  • அதிக மதிப்புள்ள காந்தங்களுக்கான நாட்டின் முதல் ஒருங்கிணைந்த உள்நாட்டு உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்க, இந்தியா REPM (உருக்கி இணைக்கப்பட்ட அருமண் நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்) திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டம் இறக்குமதிச் சார்புநிலையைக் குறைத்து மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற உத்தி சார் துறைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட செலவினம் சுமார் 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்ற நிலையில் மேலும் இது ஆண்டிற்கு 6,000 மெட்ரிக் டன் காந்த உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.
  • காந்தங்களுக்குத் தேவையான அருமண் தாதுக்கள் ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் காணப்படுகின்றன.
  • இதற்கான மூலப்பொருட்களைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சாம்பியா போன்ற நாடுகளுடன் அரசாங்கம் சில சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
  • REPM திட்டம் இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்துறை திறனை வலுப்படுத்துவதோடு, தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்