Reporters without borders (எல்லைகளைக் கடந்த பத்திரிக்கையாளர்கள்) என்ற அமைப்பின் அறிக்கை
December 14 , 2021 1352 days 643 0
சீனாவில் ‘உணர்திறன் மிக்க’ கருத்துகள் பற்றி செய்தி வெளியிட்டதற்காக ஏறத்தாழ 127 பத்திரிக்கையாளர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது Reporters without borders என்ற அமைப்பின் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இது மட்டுமின்றி உலகிலேயே அதிகளவில் பத்திரிக்கையாளர்களைச் சிறை பிடிக்கும் நாடாக சீனா திகழ்வதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
சீனாவின் ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் ‘உணர்திறன்மிக்கவை’ எனக் கருதப்பட்ட சில கருத்துகளைப் பற்றி கருத்துக்களை வெளியிட்டதற்காக இந்த பத்திரிக்கையாளர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.