இது விண்வெளித் துறையின் (DoS) கீழ் இஸ்ரோவால் வெளியிடப்பட்டது.
இது இஸ்ரோவின் தற்போதைய மற்றும் எதிர்கால விண்வெளிப் பயணங்களுடன் இணைக்கப் பட்ட பணி சார்ந்த ஆராய்ச்சிகளில் உள்ள சிக்கல்களின் பட்டியல் ஆகும்.
இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து ஆராய்ச்சித் திட்டங்களை வரவேற்கிறது.
கல்வி ஆராய்ச்சியை தேசிய விண்வெளி தொழில்நுட்பத் தேவைகளுடன் இணைப்பதே இதன் நோக்கம் ஆகும்.
திட்டம் குறித்த முன்மொழிவுகளை I-GRASP (ISRO–ஆராய்ச்சி மற்றும் ஆதரவு திட்டங்களுக்கான மானிய அமைப்பு) வலைதளம் மூலம் இயங்கலையில் சமர்ப்பிக்க வேண்டும்.