TNPSC Thervupettagam

RhoDIS இந்தியா திட்டம்

July 16 , 2025 15 hrs 0 min 64 0
  • காண்டாமிருக டிஎன்ஏ குறியீட்டு அமைப்பு (RhoDIS)- இந்தியத் திட்டத்தின் கீழ், ஒரு சிறப்புக் குழு 2,573 காண்டாமிருக கொம்புகளிலிருந்துப் பெறப்பட்ட மாதிரிகளின் மரபணுப் பகுப்பாய்வைத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் கொம்புகளில் பெரும்பாலானவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அசாம் வனப் பிரிவால் அழிக்கப்பட்டன.
  • இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) மரபியல் ஆய்வகம், RhoDIS இந்தியாவிற்கான தரவுத் தளத்தை உருவாக்குவதற்காக வேண்டி டிஎன்ஏ விவரக் குறிப்புகள் உருவாக்க நடவடிக்கையினை மேற்கொள்கிறது.
  • இந்தப் பகுப்பாய்வானது, அசாமின் காண்டாமிருக எண்ணிக்கையில் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட DNA வரிசையான குறுகிய டிஎன்ஏ  வரிசை மீண்டும் வருதல் (STR) அல்லீல் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காண உதவுகிறது.
  • RhoDIS இந்தியா திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது MoEFCC, காண்டாமிருகம் வாழும் மாநிலங்கள், இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் இயற்கை இந்தியாவிற்கான உலகளாவிய நிதி (WWF-India) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும்.
  • இந்தத் திட்டமானது காண்டாமிருகம் தொடர்பாக மேற்கொள்ளபப்டும் குற்றங்கள் குறித்த ஒரு அறிவியல் விசாரணையை மேம்படுத்துவதையும், இந்தியாவின் காண்டா மிருக எண்ணிக்கையைத் திறம்பட நிர்வகிப்பதை ஆதரிப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்