காண்டாமிருக டிஎன்ஏ குறியீட்டு அமைப்பு (RhoDIS)- இந்தியத் திட்டத்தின் கீழ், ஒரு சிறப்புக் குழு 2,573 காண்டாமிருக கொம்புகளிலிருந்துப் பெறப்பட்ட மாதிரிகளின் மரபணுப் பகுப்பாய்வைத் தொடங்கியுள்ளது.
இந்தக் கொம்புகளில் பெரும்பாலானவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அசாம் வனப் பிரிவால் அழிக்கப்பட்டன.
இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) மரபியல் ஆய்வகம், RhoDIS இந்தியாவிற்கான தரவுத் தளத்தை உருவாக்குவதற்காக வேண்டி டிஎன்ஏ விவரக் குறிப்புகள் உருவாக்க நடவடிக்கையினை மேற்கொள்கிறது.
இந்தப் பகுப்பாய்வானது, அசாமின் காண்டாமிருக எண்ணிக்கையில் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட DNA வரிசையான குறுகிய டிஎன்ஏ வரிசை மீண்டும் வருதல் (STR) அல்லீல் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காண உதவுகிறது.
RhoDIS இந்தியா திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது MoEFCC, காண்டாமிருகம் வாழும் மாநிலங்கள், இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் இயற்கை இந்தியாவிற்கான உலகளாவிய நிதி (WWF-India) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும்.
இந்தத் திட்டமானது காண்டாமிருகம் தொடர்பாக மேற்கொள்ளபப்டும் குற்றங்கள் குறித்த ஒரு அறிவியல் விசாரணையை மேம்படுத்துவதையும், இந்தியாவின் காண்டா மிருக எண்ணிக்கையைத் திறம்பட நிர்வகிப்பதை ஆதரிப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.