பழங்குடியின கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளிகளை ஊக்குவிப்பதற்காக மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் ‘RISA: Timeless Tribal’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது பழங்குடியினத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்காக TRIFED அமைப்பால் செயல்படுத்தப்படும் ஒரு உயர்நிலைக் கொண்ட தேசிய பிராண்ட் ஆகும்.
இந்தத் திட்டம் பழங்குடியின நெசவுகள், சித்திரத் தையல் மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பதோடு, ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா) திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது.
இது தொகுப்பு அடிப்படையிலான வளர்ச்சி, திறன் பயிற்சி, நவீன வடிவமைப்பு ஆதரவு மற்றும் சூழலுக்குகந்த பேக்கேஜிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இதில் அசாமின் எரி பட்டு, லடாக்கின் பஷ்மினா, சத்தீஸ்கரின் டோக்ரா கலை மற்றும் தமிழ்நாட்டின் தோடர் எம்பிராய்டரி போன்ற புகழ்பெற்ற தயாரிப்புகள் அடங்கும்.
இது பழங்குடியினக் கைவினைஞர்களின் வருமானத்தை மேம்படுத்தவும், பாரம்பரிய கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.