TNPSC Thervupettagam

RISA: Timeless Tribal திட்டம்

March 24 , 2026 3 days 79 0
  • பழங்குடியின கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளிகளை ஊக்குவிப்பதற்காக மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் ‘RISA: Timeless Tribal’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது பழங்குடியினத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்காக TRIFED அமைப்பால் செயல்படுத்தப்படும் ஒரு உயர்நிலைக் கொண்ட தேசிய பிராண்ட் ஆகும்.
  • இந்தத் திட்டம் பழங்குடியின நெசவுகள், சித்திரத் தையல் மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பதோடு, ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா) திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது.
  • இது தொகுப்பு அடிப்படையிலான வளர்ச்சி, திறன் பயிற்சி, நவீன வடிவமைப்பு ஆதரவு மற்றும் சூழலுக்குகந்த பேக்கேஜிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இதில் அசாமின் எரி பட்டு, லடாக்கின் பஷ்மினா, சத்தீஸ்கரின் டோக்ரா கலை மற்றும் தமிழ்நாட்டின் தோடர் எம்பிராய்டரி போன்ற புகழ்பெற்ற தயாரிப்புகள் அடங்கும்.
  • இது பழங்குடியினக் கைவினைஞர்களின் வருமானத்தை மேம்படுத்தவும், பாரம்பரிய கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்