சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) ஆனது 2025 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செலவுகள் (RPGC) அறிக்கையினை வெளியிட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ந்து வரும் செலவு பயன் திறனை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டில், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறன் சேர்த்தல்கள் 582 ஜிகாவாட்களை (GW) எட்டின.
இதில் சூரிய ஒளிமின்னழுத்தங்கள் (PV) 452.1 GW (77.8%) மற்றும் காற்றாலை 114.3 GW பங்களிக்கிறது.
2024 ஆம் ஆண்டில், புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் சுமார் 91% ஆனது உலகளவில் மலிவான புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மாற்றுகளை விட குறைந்த செலவில் மின்சாரத்தினை வழங்கின.
சூரிய PV புதைபடிவ எரிபொருட்களை விட சராசரியாக 41% மலிவானது.
2024 ஆம் ஆண்டில் 582 GW புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கச் செலவு சேமிப்புக்கு வழிவகுத்தது என்பதோடு இது தோராயமாக 57 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைத் தவிர்த்தது.