"ஒரு RRB, ஒரு முத்திரைச் சின்னம்" முன்னெடுப்பின் கீழ் இந்திய அரசும் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி ஆகியவை 28 பிராந்தியக் கிராமப்புற வங்கிகளுக்கும் (RRB) ஒரே பொதுவான முத்திரைச் சின்னத்தினை அறிமுகப்படுத்தின.
முத்திரைச் சின்னத்தில் வளர்ச்சியைக் குறிக்கும் மேல்நோக்கிய அம்பு, ஆதரவினைக் குறிக்கும் கைகள் மற்றும் அறிவு மற்றும் அதிகாரமளிப்பைக் குறிக்கும் ஒரு சுடர் ஆகியவை உள்ளன.
இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் அடர் நீலம் (நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை) மற்றும் பச்சை (வேளாண்மை, வாழ்க்கை மற்றும் வளர்ச்சி) ஆகியனவாகும்.
RRB வங்கிகள் ஆனது கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப்புறப் பகுதிகளில் கடன் மற்றும் வங்கிச் சேவைகளை வழங்கும் சிறப்பு வங்கிகள் ஆகும்.
1976 ஆம் ஆண்டு பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் சட்டத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட RRB வங்கிகள், மத்திய அரசு (50%), மாநில அரசு (15%) மற்றும் நிதி ஆதரவு வங்கி (35%) ஆகியவற்றுக்குச் சொந்தமானவையாகும்.
RRB வங்கிகள் சிறு விவசாயிகள், கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், MSME நிறுவனங்களை ஆதரிக்கின்றன, மேலும் இவை நிதி உள்ளடக்கம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான முக்கிய கருவிகளாகச் செயல்படுகின்றன.