காசநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கானச் செலவு குறைந்த, rt-LAMP என்ற ஒரு சோதனையினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி பரிசோதித்துள்ளனர்.
ஒரு சோதனையை நிறைவு செய்வதற்கு என 3 வெவ்வேறு வெப்பநிலை அமைப்புகள் தேவைப்படும் RT-PCR சோதனைகளைப் போலன்றி, rt-LAMP சோதனை ஒற்றை வெப்ப நிலையில் செயல்படுகிறது.
ஒரு மாதிரியில் ஒரு மைக்ரோலிட்டருக்கு 10 நகல் எண்கள் மட்டுமே இருந்த போதும் கூட, TB DNA-வினை இதனால் கண்டறிய முடிந்தது.