TNPSC Thervupettagam

RTE சேர்க்கை விதி - உச்ச நீதிமன்ற கருத்து

May 2 , 2026 15 hrs 0 min 34 0
  • லக்னோ பப்ளிக் ஸ்கூல் எதிர் உத்தரப் பிரதேச மாநிலம் என்ற வழக்கில், RTE சட்டத்தின் கீழ் அருகிலுள்ள பள்ளிகள் உடனடியாக சேர்க்கை வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆனது, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது.
  • இது கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் சரத்து 21A (86வது திருத்தச் சட்டம், 2002 மூலம் சேர்க்கப்பட்டது) அடிப்படையிலானது.
  • இச்சட்டம் தனியார் பள்ளிகளில் EWS (பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர்) மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கு 25% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குகிறது.
  • அரசாங்கம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும், மேலும் தனியார் பள்ளிகளுக்கான செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • சரத்து 51A(k) (பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்) மற்றும் சரத்து 45 (ஆரம்பகால குழந்தை பராமரிப்பு) ஆகியன பிற விதிகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்