ஊரகத் தொழில்நுட்ப நடவடிக்கைக் குழு 2.0 (RuTAG 2.0) வருடாந்திர மறுமதிப்பாய்வு சந்திப்பானது கௌஹாத்தியின் இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகத்தில் (IIT) நடைபெற்றது.
இந்த மதிப்பாய்வு ஆனது ஏழு RuTAG (IIT கௌஹாத்தி, SKUAST-காஷ்மீர், IIT டெல்லி, IIT பம்பாய், IIT ரூர்க்கி, ICAR-NAARM ஐதராபாத், IIT மெட்ராஸ்) மையங்களையும், மாநிலத் துறைகள், தொழில்துறைகள் மற்றும் சமூக அமைப்புகளுடனான அவற்றின் கூட்டுறவுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
RuTAG 2.0 வருடாந்திர முன்னேற்ற அறிக்கையும் (2024–25) வெளியிடப்பட்டது.
வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, நீர் சுத்திகரிப்பு மற்றும் கிராமப்புற கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் 56க்கும் மேற்பட்ட தற்போதையத் திட்டங்களை இந்த அறிக்கை காட்டுகிறது.
வேளாண்மை மற்றும் அக்வா வோல்டாயிக்ஸில் (நீர் மற்றும் சூரிய சக்தி சார்ந்தது) புத்தாக்க மையம் (CIAAV) மற்றும் நல்வாழ்வு சார் தயாரிப்புகளின் கண்டுபிடிப்புக்கான ஒருங்கிணைந்த மையம் (IFWPI) ஆகியவை திறக்கப்பட்டன.
புதுமை மற்றும் கூட்டாண்மை மூலம் தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான உத்தி சார் செயல் திட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப் பட்டன.
வடகிழக்குப் பிராந்தியத்தில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, கிராமப்புறத் தொழில் முனைவு மற்றும் நிலையான வாழ்வாதார உருவாக்கம் ஆகியவை குறித்து இந்தச் சந்திப்பு எடுத்துரைத்தது.