ராஜஸ்தானின் புண்டியில் உள்ள இராம்கர் விஷ்தாரி புலிகள் வளங்காப்பகத்தில் (RVTR) முதல் முறையாக மீன்பிடிப் பூனை தென்பட்டுள்ளது.
இங்கு மீன்பிடிப் பூனை காணப் பட்டதுடன், இந்த வளங்காப்பகத்தில் உள்ள சிறியப் பூனை இனங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
மீன்பிடிப் பூனை ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம்" ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது ஒரு காப்பகத்தின் சுற்றுச்சூழல் செழுமையை உறுதிப்படுத்தி, ஆரோக்கியமான ஈர நிலங்கள் மற்றும் ஆற்றங்கரை சுற்றுச்சூழல் அமைப்புகளின் இனக் குறிகாட்டி இனமாக உள்ளது.