TNPSC Thervupettagam

S-400 சுதர்சன் சக்ரா

May 10 , 2025 4 days 79 0
  • பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் மற்றும் எறிகணைகளைப் பயன்படுத்தி வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல இராணுவப் பகுதிகளைத் தாக்க முயன்றது.
  • ஒருங்கிணைந்த எதிர்ப்பு ஆளில்லா விமான அமைப்புகளின் (UAS) கட்டமைப்பு மற்றும் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு S-400 ஆகியவை மூலம் இவை தடுக்கப்பட்டன.
  • ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட, நீண்ட தூர தாக்குதல் வரம்பு கொண்ட நிலம் விட்டு வானில் ஏவக்கூடிய இந்த ஒரு எறிகணை அமைப்பானது இந்தியாவில் 'சுதர்சன் சக்ரா' என்று அழைக்கப்படுகிறது.
  • இது உலகின் மிகவும் மேம்பட்ட வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.
  • இது ஆளில்லா விமானங்கள், ரேடார் கருவிக்குப் புலப்படாத விமானங்கள், சீர்வேக எறிகணைகள் மற்றும் உந்துவிசை எறிகணைகள் உள்ளிட்ட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, கண்காணிக்கும் மற்றும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
  • S-400 எறிகணையானது சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், 30 கிலோ மீட்டர் உயரத்திலும் உள்ள வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியது.
  • ஒரே நேரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இலக்குகளைக் கண்காணிக்கக் கூடிய இந்த அமைப்பானது மிகவும் விரைந்து இடம் விட்டு இடம் நகர்த்தி பொருத்தக் கூடிய ஏவு அமைப்புகளில் பொருத்தப்பட்டுள்ளது.
  • ரஷ்யா, சீனா, துருக்கி, அல்ஜீரியா, பெலாரஸ் மற்றும் சிரியா ஆகியவை இந்த S-400 அமைப்பினைக் கொண்டுள்ள பிற நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்