TNPSC Thervupettagam
May 14 , 2025 3 days 34 0
  • அண்டவியல் வல்லுநர்கள் நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருளை அளவிடுவதற்காக சிக்மா 8 அல்லது S8 என்ற சொல்லினைப் பயன்படுத்துகின்றனர்.
  • இந்தப் பருப்பொருளானது, விண்வெளியின் வெவ்வேறு இடங்களில் குவிகின்ற புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற பேரியான் துகள்களால் ஆனது.
  • S8ன் மதிப்பு ஆனது பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
  • ஒவ்வொரு பகுதியும் தோராயமாக 26 மில்லியன் ஒளி ஆண்டுகள் கொண்ட வானியல் நீள அளவினால் வரையறுக்கப்படுகிறது.
  • அதிக S8 மதிப்பானது, அதிக அளவிலானப் பருப்பொருட்கள் ஒன்றாகக் குவிவதுடன் பெரிய திரளாக்கத்தினைக் குறிக்கிறது.
  • குறைந்த S8 மதிப்பானது, பருப்பொருள் மிகவும் ஒரு சீரான விதத்தில் பரவியுள்ளதைக் குறிக்கிறது.
  • பல்வேறு அளவீட்டு முறைகளிலிருந்து உருவாகின்ற 'S8 முரண்பாடு' ஆனது பல்வேறு S8 மதிப்பீடுகளை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்