தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள சஃப்ரான் விமான எஞ்சின் சேவை இந்தியா (SAESI) மையத்தினை பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த மையம் Leading Edge Aviation Propulsion (LEAP) எஞ்சின்களின் உற்பத்திக்காக அமைக்கப் பட்டுள்ளது.
இந்த எஞ்சின்கள் ஏர்பஸ் A320neo மற்றும் போயிங் 737 MAX விமானங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றன.
SAESI என்பது மிகப்பெரிய உலகளாவிய விமான எஞ்சின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையங்களில் ஒன்றாகும் என்பதோடு இது இந்தியாவில் முதலாவது உலகளாவிய அசல் எஞ்சின் உபகரண உற்பத்தியாளர் (OEM) செயல் பாட்டைக் கொண்டுள்ளது.