உலக சுகாதார அமைப்பானது புதிய ஆலோசக சேவைக் குழு ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதற்கு புதிய நோய்க் கிருமிகளின் தோற்றம் குறித்த சர்வதேச அறிவியல் ஆலோசக சேவைக் குழு என (International Scientfic Advisory Group for Origins of Novel Pathogens - SAGO) பெயரிடப் பட்டுள்ளது.
வருங்காலத்தில், பெருந்தொற்றை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடன் கூடிய புதிய நோய்க் கிருமிகளின் தோற்றத்தைப் பற்றிய முறையான ஆய்வினை மேற்கொள்ளச் செய்வதும், உலக சுகாதார அமைப்பிற்கு இது குறித்த மேம்பாட்டு ஆலோசனைகளை வழங்குவதுமே இதன் செயல்பாடு ஆகும்.
SARS – CoV – 2 எனும் வைரசின் தோற்றத்தினைக் கண்டறிவதிலும் இந்தக் குழு ஈடுபட உள்ளது.